படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 8

படைப்பு ‘தகவு’ எட்டாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது.

படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 7

படைப்பு ‘தகவு’ ஏழாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது.

படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 6

படைப்பு ‘தகவு’ ஆறாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்துவிரிந்திருக்கிறது. கோவைஞானி தமிழுலகம் கொண்டாடப்படவேண்டிய முதுபெரும் திறனாய்வாளர். மார்க்சியத்தைத் தமிழுடன் இணைத்து மனதுக்கு நெருக்கமாக்கும் அவரது நேர்காணல் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. சிறுபருவ இனிய உள்ளங்களைப் பேச்சு வழக்கில் அறிமுகப்படுத்தும் ‘சிலேட்டுக்குச்சி’ என்னும் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. காந்தி குறித்த அனுபவங்கள் மற்றும் அறிமுகங்களை மையப்படுத்தி இருகட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகளுக்காக இதுவரை வெளிவந்த கவிச்சித்திரம் பகுதியுடன் ‘படைப்புலகம்’ என்ற புதிய பகுதியும் ‘கஸல்’ கவிதைத் தொடரும் இணைந்துள்ளன.

படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 5

படைப்பு ‘தகவு’ ஐந்தாம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்திருக்கிறது. உயர்தனிச் செம்மொழியான தமிழைக் காலந்தோறும் முளைத்தெழுந்த பல அமைப்புக்கள் செவ்வனே வளர்த்துவந்துள்ளன. நேரடியாய்ப் புலவர்கள் கூடிய அன்றைய சங்கம் முதல் முகநூலில் கவிஞர்கள் கூடும் இன்றைய குழுக்கள் வரை அமைப்புகளின் இயக்கங்கள் நிலைத்த இலக்கியங்களாகப் பதியப்பட்டுவருகின்றன. அவ்வழி, இம்மாதத்திற்குரிய தகவு, முகநூலில் இயங்கும் படைப்புக் குழுமம் சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடத்திய இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிறுத்திச் சில கட்டுரைகளைத் தாங்கிவந்துள்ளது. பெரியார் பிறந்த மாதம் இது.

படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 4

படைப்பு ‘தகவு’ நான்காம் மின்னிதழ் உங்கள் கண்முன் ஒளிவீசிப் பரந்திருக்கிறது. நல்ல வாசிப்புத்திறன் உள்ள பலராலும் கவனிக்கப்படக்கூடிய இதழாக நம் தகவு வளர்ந்துவருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. நிறைகளோடு திருத்திச் செய்யவேண்டியவற்றையும் சுட்டிக்காட்டும் அன்பு உள்ளங்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம். சுதந்திர தினம் குறித்த நினைவுகளுடன், கலைஞரின் மறைவு குறித்த வருத்தத்தையும் இதழ் பதிவுசெய்துள்ளது. சமகாலத் தலைசிறந்த கவிஞரான ஈரோடு தமிழன்பனின் நேர்காணல் வெளியாகியுள்ளது. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தொடர்கள் என இலக்கியச் சுவைக்குரிய பகுதிகள் உங்களுக்காய்..
••••••••••••••••

படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 3

படைப்பு ‘தகவு’ மூன்றாம் இதழ் உங்கள் கண்முன் ஒளிவீசி விரிந்திருக்கிறது. எத்தனையோ உள்ளங்களில் நீங்காத இலக்கிய நினைவாக உள்ள சுகன் குறித்த எண்ண அலைகள் இவ்விதழிலும் நனைத்துச் செல்கின்றன. கவிஞர் புவியரசுவின் நேர்காணல் இவ்விதழில் வெளிவந்துள்ளது. ‘கற்றது தமிழ்’ என்னும் பகுதி தொடங்கப்பட்டுள்ளது. தன் அகம், சுற்றியிருக்கும் உள்ளங்களின் ஊசலாட்டங்கள், புனைவுலகக் கற்பனைகள் என இலக்கியவாதிகள் களம்கண்ட பல படைப்புகளும் உங்களுக்காய்...

படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 2

இந்த மாத இதழில் வழக்கமான பகுதிகளோடு மாணவர் பகுதிகள் கூடியுள்ளன. வாசகர் எண்ணங்களும் வாசிப்பனுபவங்களும் செறிவார்ந்த கட்டுரைகளும் கதைகளும் கவிதைகளும் நிரம்பி உங்கள் பார்வைக்காக விரிகிறது படைப்பு‘தகவு’. படைப்பின் பரிமாணம் பல வகைகளில் சிறகடித்துப் பறக்கிறது இந்த இதழில்...

படைப்பு 'தகவு' - கலை இலக்கிய மின்னிதழ் - 1

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சாத்தியமாகியிருக்கும் மின்னிதழ் வடிவத்தில் உங்கள் கருத்துக்கு விருந்தளிக்கத் தொடங்குகிறது ‘படைப்பு - தகவு’ எனும் கலை இலக்கிய இதழ். சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், கவிதைகள், நேர்காணல் என்று பலவிதப் பகுதிகளுடன் மாதந்தோறும் இதழ் வெளிவரும்...
அதில் இதோ முதல் இதழ்...