logo

காலாதீதத்தின் சுழல்


நூல் பெயர்    :  காலாதீதத்தின் சுழல்
                      (கவிதை)

ஆசிரியர்    :  ரத்னா வெங்கட்

பதிப்பு            :  முதற்பதிப்பு 2020

பக்கங்கள்    :  112

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  படைப்பு டிசைன் டீம் 

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
  
வெளியீடு            :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை            :  ரூ100
மெய்ப்பொருளியல் என்பது உட்பொருளை உணர்த்தும் கூறாகவும், இருத்தலியல் என்பது வாழ்வை உணர்த்தும் கூறாகவும் இருவேறாக இருப்பதுபோலத் தெரிந்தாலும், இலக்கியம் என வரும்போது அடிப்படையில் ஒன்றாகி மெய்யியல், வாழ்வியல், இருத்தலியல் என கவிதையில் மூன்றாகிச் சங்கமிக்கிறது. எந்த இலக்கியம் இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் எல்லா காலத்தோடும் இணைத்து. பிணைக்கும் ஒரு தொடர்ச் சங்கிலிபோல இருக்கிறதோ அதுவே சிறந்த இலக்கியம். எந்த வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருமுறை ஒலித்து, உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதோ?,  எந்தச் சிந்தனை பிரிக்கப் பிரிக்க சேர்ந்து நிற்கிறதோ?, எந்தச் சந்தேகம் படிக்கப் படிக்க புரியத் தொடங்குகிறதோ?, எந்தப் புரிதல் மூளைக்குள் அனிச்சை செயலாய்த் தோன்றி மனதிற்குள் வந்து அமர்கிறதோ? அதுவே சிறந்த கவிதை. அது அழகுணர்வு அல்லது கலையின் வெளிப்பாடு என்பது மட்டுமல்ல; அதன் அடிப்படையில் அந்தச் சமூகப் பண்பாட்டின் அறிதலையும், மனிதனின் எதார்த்த வாழ்வின் உண்மையையும், ஆன்மாவை அணுகும் வழிமுறையையும், பிரபஞ்சத்தின் ஆதார இருப்பிற்கான அவசியத்தையும், அனைத்து உயிர்களின் தேடலுக்கான தரிசிப்பையும் உணர்த்துவதாக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட தேடல்களையெல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ’காலாதீதத்தின் சுழல்› தொகுப்பு. நவீனத்தை விரும்பும் எல்லோரும் எளிதாகப் புரிந்துகொள்ளும்வகையில் இருப்பதே இந்நூலின் பலம்.

புதுக்கோட்டையை வாழ்விடமாகவும், பெங்களூரை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ரத்னா வெங்கட் அவர்களுக்கு இது, முதல் நூல். இன்றைய இலக்கிய உலகில், நவீனத்தைக்  கையாளும் பெண் கவிஞர்களில் இந்நூல்மூலம் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொள்வார். மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.