logo

மடைதிறக்கும் மௌனம்


நூல் பெயர்    :  மடைதிறக்கும் மௌனம்
                      (கவிதைகள் )

ஆசிரியர்    :  சங்கரி சிவகணேசன்  

பதிப்பு            :  முதற்பதிப்பு - 2023

பக்கங்கள்    :  128

வடிவமைப்பு    :  முகம்மது புலவர் மீரான்

அட்டைப்படம்    :  படைப்பு டிசைன் டீம்  

வெளியீட்டகம்    :  இலக்கிய படைப்பு குழுமம்

அச்சிடல்    :  படைப்பு பிரைவேட் லிமிடெட், சென்னை
  
வெளியீடு    :  படைப்பு பதிப்பகம்

பதிப்பாளர்    :  ஜின்னா அஸ்மி

விலை    :  ரூ 130
தனிமை தவிப்பின் தனித்துவத்தை, இருளில் ஒளிரும் விட்டில்கள் எடுத்துச் சொல்லும். வரங்களைத் தவிர்க்கும் தவங்களில் இரு ஜோடி கண்கள் முட்டிக்கொள்ளும். மனத்திற்குள் நிகழும் மாயத்தை மௌனங்கள் வழியே பேசிச் செல்லும். இருவேறு பார்வைகளின் சமத்துவத்தைக் காதல் மட்டும்தானே சமன் செய்யும். கண்ணால் காண்பது யாவும் காண்பவர்கள் அதைச் சொந்தம் கொண்டாட இயலாது என்றாலும், காணாததுகூட கண்கள் சொந்தம் கொண்டாடிக் கொள்ளும் என்பதே காதலின் மகத்துவம். ஒற்றைப் பார்வையில் ஓராயிரம் கவிதைகளை எழுதி விடும் வல்லமை காதலைத் தவிர வேறு எதற்கும் இல்லை. அப்படிப்பட்ட உணர்வுபூர்வமான காதலின் மகத்துவத்தை எல்லாம் கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘மடை திறக்கும் மௌனம்’ நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் மனத்தில் மௌனத்தால் பேசி மடை திறக்கும் சப்தங்களை நிரப்பி விட்டுச் செல்லும் என்பதே இந்நூலின் பலம்.

இலங்கையைப் பிறப்பிடமாகவும், சுவிட்ஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி  சங்கரி சிவகணேசன் அவர்களுக்கு இது மூன்றாம் நூல். இவர், இதற்கு முன் வெளியிட்ட ’உன் நிலம் நோக்கி நகரும் மேகம்’ மற்றும் ’அரூபநிழல்கள்’ ஆகிய நூல்கள் வாசகர்கள் மத்தியிலும் இலக்கியஉலகிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவரின் படைப்புகள் பல்வேறு வார இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களிலும் வெளியாகியுள்ளன. படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் ’மாதாந்திர சிறந்த படைப்பாளி’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.