நூல்

மறை நீர்

நூலாசிரியர்

கோ. லீலா

நூல் வகைமை

கட்டுரை

நூல் விலை

150

வெளியீடு

படைப்பு பதிப்பகம்

அட்டைப்படம்

ரவி பேலட்

மறை நீர்

2019    417    0    0
மறை நீர்
கோ. லீலா

காலத்தை அளக்க மனிதன் மணித்துளியை பயன்படுத்துகிறான் ஆனால் இயற்கை, நீர்த்துளியை பயன்படுத்துகிறது. இதில் மணித்துளி, மனிதன் வாழ்ந்ததற்கான அடையாளத்தையும், நீத்துளி வாழ்வதற்கான ஆதாரத்தையும் சொல்கின்றன. இதை வேறுமாதிரி சொல்வதென்றால், கடந்தகாலத்தை கணிக்க மணித்துளி பயன்பட்டாலும் எதிர்காலத்தை நிர்ணயிக்க நீர்த்துளியால் மட்டுமே முடியும் என்பதே சத்தியம். அதனால்தான் 'நேரமின்றி அமையாது உலகு' எனச் சொல்லாமல் 'நீரின்றி அமையாது உலகு' என்று நீரின் முக்கியத்துவத்தைப் பற்றி பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்கு உறக்கச் சொன்னது சரித்திரத்தின் ஆதித் தாயான தமிழினம். அந்த ஆதிச் சரித்திரத்தின் நீட்சியாக, இன்றைய சூழலில் நீரின் தேவை பற்றியும் அதன் சேமிப்பு, நீர் மேலாண்மை, அவசியத்தை விழிப்புணர்வு தரும் வகையில் தொகுக்கப்பட்டிருப்பதே "மறை நீர்" தொகுப்பு. இயற்கைக்கு எதிராக செய்யப்படும் எதுவும் மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கானதாக இருக்க முடியாது என்பதை போல, இதில் சொல்லப்பட்ட அனைத்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய காலப்பெட்டகம் என்பது இத்தொகுப்பின் பலம்.

தஞ்சையை வாழ்விடமாகவும், பொள்ளாச்சியை வசிப்பிடமாகவும், அரசு பொதுப்பணித்துறையில் நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளருமான படைப்பாளி "கோ. லீலா" அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள், பல பிரபல பத்திரிகை இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும் பெற்றவர் அத்துடன் துறை சார்ந்தும் எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018
281   2   0
2018
225   0   0