logo

படைப்பு சிறுகதைப் போட்டி - 2023


அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த "அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை பரிசுப்போட்டி"  இந்தாண்டும் உங்களுக்காக சிறுகதைப் போட்டியாக படைப்புக்குழுமம் மிகவும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டி விவரங்களும் பரிசு விவரங்களும் தெளிவாக கீழே கொடுக்கப் பட்டுள்ளது... தயவு கூர்ந்து பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். சந்தேகம் இருப்பின் உடனுக்குடன் இணையதளத்தில் உள்ள கருத்து (கமெண்ட்ஸ்) பகுதியில் கேட்டு தெரிந்து கொள்ளவும்...

பரிசு விவரம்:
மொத்த பரிசு : 40,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்).

முதல் பரிசு : ஒரு நபர் - 20,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் இருபதாயிரம் ரூபாய்).

இரண்டாம் பரிசு : ஒரு நபர் - 10,000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில்  பத்தாயிரம் ரூபாய்).

மூன்றாம் பரிசு : ஒரு நபர் - 5000 ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில்  ஐந்தாயிரம் ரூபாய்).

சிறப்பு பரிசு : ஐந்து நபர்கள் - 5000 (இந்திய ரூபாய் மதிப்பில் தலா ஆயிரம் ரூபாய்)

ஆக மொத்தம், பரிசுத்தொகை 40,000 ரூபாயிலிருந்து வெற்றி பெரும் 8 நபர்களுக்கு மேற்கண்டவாறு பணமாக பரிசு பகிர்ந்து அளிக்கப் படும்

பரிசளிப்பவர் விவரம்: சகா (சலீம் கான்)

போட்டி விவரம்:

தலைப்பு மற்றும் கரு : எழுத்தாளரின் விருப்பம்

ஆரம்ப நாள் : 31-03-2023 (இரவு 12 மணி முதல்)
கடைசி நாள் : 03-04-2023 (இரவு 12 மணி வரை)

போட்டி நடுவர் : 
எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள்

முடிவு அறிவிப்பு நாள் : பின்னர் அறிவிக்கப்படும்

போட்டி விதிமுறைகள்:

1.  ஒருவர் அதிகபட்சம் ஒரு கதை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். அதுவும் வரும் 31-மார்ச்-2023 (வெள்ளிக்கிழமை இரவு 12:00 மணி முதல்) அன்று முதல் 03-ஏப்ரல்-2023 (திங்கள் இரவு 12:00 மணி வரை)  மட்டும் ( 72 மணி நேரத்துக்குள்) கதைகளை https://padaippu.comஎன்ற இணையதளத்தில் மட்டுமே போட்டி பகுதியில் நேரடியாக பதிவிடுதல் வேண்டும். "போட்டிக்கு சமர்ப்பிக்க" என்று பட்டன் இருக்கும் அதை க்ளிக் செய்து உங்கள் கதையை பதிவு செய்ய வேண்டும்.

2. இது சிறுகதைப் பரிசுப்போட்டி என்பதால் கதை மட்டுமே எழுத வேண்டும். கதை 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

3. கதைகளை போட்டிக்கு அனுப்பும் முன் வேறு எங்கும் பதிவிடுதல் கூடாது. இணையதளத்தில் போட்டி பகுதியில் பதியப் பெற்ற கதைகளே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும். போட்டி நடக்கும் 72 மணி நேரம் வரை யார் பதிந்த கதைகளும் யாராலும் பார்க்க இயலாது. பதிந்தவர்களின் பெயர் பட்டியல் மட்டுமே காட்டப்படும். போட்டிக்கான நேரம் முடிந்த அடுத்த வினாடி முதல் போட்டிக்கு அனுப்பிய தங்கள் கதைகள் எல்லோரும் பார்க்கும் வண்ணம் இணையத்தளத்திலேயே வெளியாகும். அங்கிருந்து தாங்கள் எங்கு வேண்டுமானாலும் (முகநூல், வாட்சாப்,மின்னஞ்சல்,மெசேஜ், டிவிட்டர் etc.... ) இப்படி எந்த பக்கத்திற்கும் பகிரலாம். இந்த முறை எதற்கென்றால் யாரும் பிறரின் கருவையோ அல்லது சாயலையோ எடுத்தாள முடியாது.

4. போட்டிக்கான அனைத்து பரிசுகளும் நடுவர் அவர்களே தேர்வு செய்து அளிக்க இருக்கிறார்.

5. போட்டிக்கு வந்த கதைகளில் சிறந்ததாக இருக்கும்  கதைகளைத் தொகுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நூலாக வெளியிடப்படும். இந்த நூலுக்கான தலைப்பும் தேர்வாகும் கதைகளில் உள்ள ஒரு பெயரே சூட்டப்பட்டு அந்த எழுத்தாளரை கவுரவிக்கப்படும்..

6. சிறந்ததாக தேர்ந்தெடுக்கப் படும் முதல் 8 கதைகளுக்கு சிறந்த படைப்புக்கான சான்றிதழ் அதுவும் நடுவராக இருக்கும் எழுத்தாளர் கையொப்பமிட்டு வழங்கப்படும். அதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் சிறப்பு இடம் பிடிக்கும் தகவலும் இடம்பெறும். மேலும் பரிசுக்கேற்ற பணமும் அளிக்கப்படும்.

7. கதைகள் இணையதளத்தில் உறுப்பினர்கள் ஆன பிறகு மட்டுமே பதிவு செய்ய இயலும். இல்லையென்றால் உறுப்பினராகி விட்டு பிறகு பதிய வேண்டுகிறோம்.

8. கதைகள் அனைத்தும் குறிப்பிட்ட தினத்தில் பதிய வேண்டும். அதற்கு மேல் கதைகள் பதியும் பட்டன் நீக்கப்பட்டிருக்கும் அதனால் சரியாக 72 மணி நேரம் மட்டுமே சமர்ப்பிக்கும் பட்டன் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க. மேலும் 2000 வார்த்தைகளுக்கு மேல் கதை இருந்தாலும் அது போட்டிக்கு தேர்வு செய்ய இயலாது.

9. என்ன தலைப்பு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். என்ன கருவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

10. போட்டிக்கு வரும் கதைகள் இதற்கு முன் வேறு எங்கும், எந்த வடிவிலும் பிரசுரமாகி இருக்க கூடாது மேலும் வேறு எங்கும் பரிசும் பெற்று இருக்க கூடாது.

11. கதைகள் படைப்பாளியின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். அது வேறு எந்த தழுவலாகவோ, நகலாகவோ இருத்தல் கூடாது.

12. விதிமுறைக்கு உட்பட்டு எழுதப் படாத படைப்புகளை தேர்வு நிலைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள இயலாது. நடுவர் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.

13. தயவு செய்து போட்டி நடக்கும் முன் வேறு எங்கும் படைப்புகளை பதிய வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் ஒத்துழைப்பே இந்த போட்டி நடந்து முடிய முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

14. இந்த தகவலை முடிந்தவரை பகிருங்கள். உலக தமிழர்கள் அனைவரும் பங்கேற்று மகிழ இது ஒரு வாய்ப்பாக அமையும்.

வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கமெண்ட் பகுதியில் கேட்டால் உடனுக்குடன் பதில் தெரிவிக்கப் படும்.
போட்டியை வெற்றி பெற செய்வோம்.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்...
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Aamir P Avatar
    Aamir P - 8 months ago
    Has this competition ended? Pls say

  • IDHAYAVAN Avatar
    IDHAYAVAN - 9 months ago
    ஆரம்ப நாள் : 31-03-2023 (இரவு 12 மணி முதல்) கடைசி நாள் : 03-04-2023 (இரவு 12 மணி வரை) வெற்றியாளர் முடிவு வந்து விட்டதா இல்லை எப்போ வரும் ஐயா விபரம் கிடைக்குமா

  • ஐ.முரளிதரன் Avatar
    ஐ.முரளிதரன் - 10 months ago
    வணக்கம், தோழர் போட்டி முடிவுகள் எப்போது வெளியாகும் என்கிற சிறு அறிவிப்பு வந்தால் நன்றாக இருக்கும்.

  • சப்திகா Avatar
    சப்திகா - 11 months ago
    போட்டி முடிவுகள் எப்பொழுது வெளியாகும்

  • க. சத்யப்பிரியா Avatar
    க. சத்யப்பிரியா - 11 months ago
    போட்டியின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

  • Karthikeyan s Avatar
    Karthikeyan s - 11 months ago
    வணக்கம், போட்டி முடிவுகள் எப்போது வெளியாகும்?

  • Venki Avatar
    Venki - 11 months ago
    போட்டி முடிவு எப்போது ?

  • Raji Avatar
    Raji - 11 months ago
    வெற்றியாளர் முடிவு அறிவிப்பு தேதி என்ன?

  • R LOKESH Avatar
    R LOKESH - 11 months ago
    வாழ்த்துகள்

  • Sathish Kasi Avatar
    Sathish Kasi - 11 months ago
    இரண்டு வார்த்தைப் பிழைகள் இருப்பதாக சமர்பித்தப் பிறகு உணர்கிறேன்.. அதை திருத்துவதற்கு வழி இருப்பதாகவும் நினைக்கிறேன்.. ஆனால் நான் சமர்ப்பித்ததை எவ்வழியில் அணுகி திருத்துவது? என் லாக் இன் லவ் தான் இருக்கிறேன். இருப்பினும் என் பதிவு ஓப்பன் ஆகவில்லை.. எடிட் செய்யும் படியான பக்கம் ஓப்பன் ஆகாமல் இருக்கிறது... உதவி தேவை தங்களிடமிருந்து.

    Saleem Khan S Avatar
    Saleem Khan S - 11 months ago
    "சமர்ப்பிக்கப்பட்ட சிறுகதை" பட்டனை அழுத்தி... உங்கள் கதைக்கு சென்று க்ளிக் செய்யவும்...பிறகு திருத்தம் செய்யலாம்.

    க. சத்யப்பிரியா Avatar
    க. சத்யப்பிரியா - 10 months ago
    முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்

  • SURENDARAN N Avatar
    SURENDARAN N - 11 months ago
    அன்புடையீர்; நான் எனது சிறுகதையை செல்போனில் தட்டச்சுச் செய்திருக்கிறேன்; அப்படியே பதிவிடலாமா? அல்லது, கணிணியில் A4 க்கு சைஸ் செட் பண்ணி பாண்ட் பார்மட் எதுவும் மாற்றி அனுப்பணுமா? தகவல் சொல்லுங்கள். நன்றி. கம்பம்அனாமிகன்.

    Saleem Khan S Avatar
    Saleem Khan S - 11 months ago
    கதையை பதிவு செய்தபின் கூட நீங்கள் திருத்தம் செய்யலாம் ஆனால் போட்டி நேரம் முடியும் முன் திருத்திக் கொள்ள வேண்டும். தமிழ் unicode font ல் இருக்கவேண்டும்.

    SURENDARAN N Avatar
    SURENDARAN N - 11 months ago
    நன்றிகள்..

  • கரு. கிருஷ்ணமூர்த்தி Avatar
    கரு. கிருஷ்ணமூர்த்தி - 11 months ago
    வணக்கம் நான் கைப் பேசியில் தான் தட்டச்சு செய்கிறேன் எழுத்துப்பிழை ஏற்படுகிறது சமர்பித்த பிறகு திருத்தம் செய்யலாமா

    Saleem Khan S Avatar
    Saleem Khan S - 11 months ago
    கதையை பதிவு செய்தபின் போட்டி நேரம் முடியும் வரையில் திருத்தம் செய்யலாம்.

  • பாலசாண்டில்யன் aka Kalyanaraman Balasubramanian Avatar
    பாலசாண்டில்யன் aka Kalyanaraman Balasubramanian - 11 months ago
    ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்களை ஊக்குவித்து ஆதரிக்கும் தங்களது மேலான பணியினை பாராட்ட வார்த்தைகள் இல்லை. DR. Balasandilyan

  • MATHA Avatar
    MATHA - 11 months ago
    I AM UNABLE TO REGISTER MY STORY BECAUSE ENGLISH FONT. HOW CAN I REGISTER MY STOR YIN TAMIL FONT.PLEASE DO NEEDFUL

    Saleem Khan S Avatar
    Saleem Khan S - 11 months ago
    You can use Tamil unicode font in system or mobile for typing but You have to submit the story only in Tamil.

  • K.M.Karthikeyan Avatar
    K.M.Karthikeyan - 11 months ago
    1000 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள கதைகளை பதிவிடலாமா இல்லை 2000 வார்த்தைகள் தான் வேண்டுமா

    Saleem Khan S Avatar
    Saleem Khan S - 11 months ago
    2000 க்கு மிகாமல் என்று சொல்லியிருக்கிறது... ஆதலால் குறைவாக இருந்தால் தவறொன்றும் இல்லை.

  • Premalatha Avatar
    Premalatha - 11 months ago
    Greetings sir/madam, Can I write a story in word document copy and paste it for submission of short story place. How will register for a member

    Saleem Khan S Avatar
    Saleem Khan S - 11 months ago
    Hello Madam, When you click the "சிறுகதை சமர்ப்பிக்க" button, system will guide you to register after that you can paste the story in corresponding box. If you want, you can edit until the competition time ending.

  • M.Manoj Kumar Avatar
    M.Manoj Kumar - 11 months ago
    சிறுகதையின் பெயர்:- பித்தலாட்டம் எழுத்தாளர்:- M.மனோஜ் குமார் ஒரே ஒரு கிராமத்தில், உள்ளாட்சி தேர்தல் நெருங்கி கொண்டிருந்தது. அந்த கிராமத்தில், ஒரு பெரிய கட்சியை சேர்ந்த “பார்த்திபன்” மற்றும் அவரது சகாக்கள், வீடு வீடாக, பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தேர்தலில் நின்றனர். பார்த்திபன் ஊர் தலைவர் பதவிக்கு நின்றார். அவரது சகாக்கள் கவுன்சிலர் பதவிகளுக்கு நின்றனர். ஒரு பக்கம், பண பட்டுவாடாவும் நடக்கிறது. பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள், “ஒவ்வொரு வீட்டுக்கும், ஆயிரம் ருபாய் கொடுத்து விடுவோம்!” என்று பேசிக்கொண்டு, ஆயிரம் ருபாய் ஒவ்வொரு வீடாக, பண பட்டுவாடா செய்கின்றனர். அந்த கிராமத்தில், மக்களோடு மக்களாக “பாபு” எனும் இளைஞன். அவனது மனைவி, உமாவோடு வாழ்கிறான். உள்ளாட்சி தேர்தலும் நடக்கிறது. அதன் முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றது. பார்த்திபன், வெற்றி பெற்று ஊர் தலைவர் ஆகிறார். அவரது சகாக்கள் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் ஆகின்றனர். ஒரு நாள் ஊர் மக்களோடு சேர்ந்து பாபு மற்றும் அவனது மனைவி உமா, ஊர் தலைவர் பார்த்திபனிடம், ஊரின் பிரச்சனைகள் அடங்கிய புகார் மனு அளிக்கின்றனர். அப்பொழுது திடீரென்று, ஊர் தலைவர் பார்த்திபன் புகார் மனுவை கிழித்து விட்டு குப்பை கூடையில் வீசுகிறார். பிறகு பாபுவிடம், “தம்பி! மக்கள் பிரச்சனையை தீர்த்து வெச்சிட்டா! நாங்க எப்படி எலெக்ஷன்-ல செலவழிச்ச பணத்தை திரும்ப வாங்குறது? மீட்கிறது? இந்த மக்கள், அந்த பணத்தை திருப்பி கொடுப்பாங்களா?” என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பாபு “ஐயா! மக்கள் ரொம்ப பாவம்! உங்களை நம்பி ஒட்டு போட்டு ஜெயிக்க வெச்சிருக்காங்க! நீங்க ஊருக்கு நல்லது பண்ணா, அடுத்த தடவை இதை விட பெரிய பதவி-ல உங்களை உட்கார வைப்பாங்க!” என்று பதில் கூறுகிறான். அதன் பிறகு ஊர் தலைவர் பார்த்திபன், “தம்பி! உனக்கும், உன் பொண்டாட்டிக்கும், எவ்வளவு பணம் வேணாலும் கொட்டி தரேன்! வாங்கிட்டு, ராஜா மாதிரி செட்டில் ஆகிடு! சந்தோஷமா இரு! எதுக்கு, இந்த வீணா போன ஜனங்களோட சேர்ந்து, உன் நேரத்தையும், உடம்பையும் கெடுத்துகிற? இந்த ஜனங்களை விட்டு தள்ளு!” அதன் பிறகு, பாபு “ஐயா! முடியாதுங்க! மக்கள் பிரச்னையை, தீர்க்காம இந்த இடத்தை விட்டு போகமாட்டேன்” என கூறுகிறான். அதன் பிறகு, கோபம் அடையும் ஊர் தலைவர் பார்த்திபன் “ஏன்டா! ஒரு தடவை சொன்னா அறிவு இல்லை! கேட்கமாட்டியா?” என பாபுவை திட்டி, மேஜையில் உள்ள சொம்பில் இருக்கும் தண்ணீரை, பாபுவின் மேல் ஊற்றுகிறார். பிறகு பொறுமை இழந்து, கோபம் அடையும் பாபு “டேய்!” என ஆவேசமாக கூச்சலிடுகிறான். பார்த்திபனின் சட்டையை பிடிக்கிறான். பார்த்திபனை அடிக்க முயல்கிறான். ஊர் தலைவர் பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள், பாபுவை மோசமாக போட்டு அடிக்கின்றனர். போலீசை வரவழைத்து, போலீஸ்காரர்களிடம் பாபுவை ஒப்படைக்கின்றனர். போலீஸ்காரர்கள், பாபுவை கைது செய்து அழைத்து செல்கின்றனர் பாபுவின் மனைவி உமா மற்றும் மக்கள் கூட்டம், இதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். போலீஸ்காரர்கள், அவர்கள் மீது தடியடி நடத்துகின்றனர். அந்த இடமே போர்க்களமாக மாறுகிறது. அந்த கிராமத்தை சேர்ந்த “விவேக்” எனும் இளைஞர் மற்றும் அவனது நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், “பேஸ்புக்”, “ட்விட்டர்”, “ஷேர்சாட்”, “இன்ஸ்டாகிராம்” என சமூக ஊடக செயலிகள் மற்றும் வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளை பரப்பி விடுகின்றனர். ஊர் தலைவர் பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள், பண பட்டுவாடா செய்து தேர்தலில் வெற்றி பெற்ற வீடியோ காட்சிகள். பாபுவை, அவர்கள் அடித்த வீடியோ காட்சிகள். போலீஸ்காரர்கள், மக்கள் மீது தடியடி நடத்திய வீடியோ காட்சிகள். என அனைத்து வீடியோ காட்சிகளும் ஊரெல்லாம், நாடெல்லாம், வைரலாக பரவுகிறது. இது மாநில முதலமைச்சர் வரை செல்கிறது. அடுத்த நாள், பாபுவின் மனைவி உமா, ஊர் பொதுமக்கள் மற்றும் தன் வழக்கறிஞரோடு, பாபுவை ஜாமீனில் விடுவிக்க, காவல் நிலையத்துக்கு செல்கின்றனர். போலீஸ்காரர்கள், பாபுவை ஜாமீனில் விடுதலை செய்ய மறுக்கின்றனர். போலீஸ் ஆணையர், சட்ட அமைச்சர், முதலமைச்சர், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என பலரிடமிருந்து, வரிசையாக காவல் நிலையத்திற்கு அழைப்புகள் வருகின்றன. பிறகு, பாபு விடுதலை செய்யப்படுகிறார் அதன் பின்னர், முதலமைச்சர், சட்ட அமைச்சர், காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் உத்தரவின்படி, பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களின் பதவி பறிபோகிறது அந்த கிராமத்தில், 1 வருடம் கழித்து உள்ளாட்சி தேர்தல், புதிதாக நடக்கிறது. அந்த தேர்தலில் நின்று, பாபு வெற்றி பெற்று, புதிய ஊர் தலைவர் ஆகிறார். அவரது மனைவி உமா, புதிய ஊர் துணை தலைவர் ஆகிறார். இளைஞர் விவேக் மற்றும் அவரது நண்பர்கள், புதிய கவுன்சிலர்களாக ஆகிறார்கள். இறுதியில், அந்த கிராமம் அபார வளர்ச்சி அடைகிறது. மற்றும் அந்த கிராம மக்கள், மகிழ்ச்சியோடு வாழ தொடங்கினர்

    Saleem Khan S Avatar
    Saleem Khan S - 11 months ago
    தங்களின் கதையை இங்கு பதிவிடக்கூடாது... சிறுகதை சமர்ப்பிக்க என்ற பட்டனை கிளிக் செய்து...கதைக்கான இடத்தில் பதிவிடவும்

  • Dharshini V Avatar
    Dharshini V - 11 months ago
    Greetings Sir/ mam. How to upload the short story? As an image of written copy or soft copy sir/mam.

    Saleem Khan S Avatar
    Saleem Khan S - 11 months ago
    Hello Madam, you need to paste in corresponding story box in unicode font.

  • T. Rathineswamy Avatar
    T. Rathineswamy - 1 year ago
    அன்புடையீர், தங்களது அறிவிப்பில், //கதைகள் இணையதளத்தில் உறுப்பினர்கள் ஆன பிறகு மட்டுமே பதிவு செய்ய இயலும். இல்லையென்றால் உறுப்பினராகி விட்டு பிறகு பதிய வேண்டுகிறோம்.// என உள்ளது. அதாவது ’படைப்பு இணைய தளத்தில்’ எனப் பொருள் கொள்ளலாமா? டி.ரத்தினசாமி

    Saleem Khan S Avatar
    Saleem Khan S - 11 months ago
    படைப்பு இணைய தளத்தில் தான் பதிவிடவேண்டும்

  • Vishnukumar Avatar
    Vishnukumar - 1 year ago
    ஐயா, உறுப்பினர் ஆனால் தான் சிறுகதையை பதிவிட முடியுமா? Paid membership ஆக இருக்குமா ஐயா?

    Saleem Khan S Avatar
    Saleem Khan S - 11 months ago
    உறுப்பினராக எந்த கட்டணமும் இல்லை